/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஒதியம்பட்டு இன்டேன் காஸ் பிளான்டில் சிலிண்டர் லாரிகள் அணிவகுப்பு
/
ஒதியம்பட்டு இன்டேன் காஸ் பிளான்டில் சிலிண்டர் லாரிகள் அணிவகுப்பு
ஒதியம்பட்டு இன்டேன் காஸ் பிளான்டில் சிலிண்டர் லாரிகள் அணிவகுப்பு
ஒதியம்பட்டு இன்டேன் காஸ் பிளான்டில் சிலிண்டர் லாரிகள் அணிவகுப்பு
ADDED : மார் 12, 2026 04:19 AM

வில்லியனுார்: ஒதியம்பட்டு இன்டேன் காஸ் பிளான்டில் வர்த்தக சிலிண்டர் நிரப்பும் பணி தடையால் சிலிண்டர் ஏற்றி செல்லும் லாரிகள் வரிசையாக அணிவகுத்து நிற்கின்றன.
வில்லியனுார் அடுத்த ஒதியம்பட்டு, சங்கராபரணி ஆற்றங்கரை பகுதியில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இன்டேன் பாட்டலிங் பிளான்ட் உள்ளது. சென்னை மணலி பகுதியில் இருந்து பெரிய டேங்கர் லாரிகள் மூலம் இந்த பிளான்டிற்கு எல்.பி.ஜி., இறக்குமதி செய்து, அங்கிருந்து கமர்ஷியல் மற்றும் டொமஸ்டிக் வகையை சேர்ந்த சிலிண்டர்கள் நிரப்பி, தினசரி சராசரியாக 50 லாரிகள் மூலம் புதுச்சேரி மற்றும் திண்டிவனம், மரக்காணம், விழுப்புரம், நெய்வேலி, விருத்தாசலம், சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இன்டேன் டீலர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
தற்போது நடந்துவரும் ஈரான் - அமெரிக்கா போரினால், காஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னை மணலி பகுதியில் இருந்து எல்.பி.ஜி., வினியோகம் குறைக்கப்பட்டுள்ளதால், ஒதியம்பட்டு காஸ் பிளான்டில் இருந்து நாள் ஒன்றுக்கு தற்போது 35 லாரிகள் மூலம் வீட்டு உபயோக சிலிண்டர்கள் மட்டுமே விநியோகம் செய்யப்படுகின்றனர்.
ஒதியம்பட்டு காஸ் பிளான்டில் தற்காலிகமாக வர்தக சிலிண்டர்கள் நிரப்பும் பணி நிறுத்தப்பட்டு, வீட்டு உபயோக சிலிண்டர்கள் மட்டுமே நிரப்புவதால் காஸ் வினியோக லாரிகள் நீண்ட வரிசையில் நிறுத்தி வைத்துள்ளனர்.
போர் முடிவுக்கு வந்த பிறகே பழையபடி எல்.பி.ஜி., டேங்கர்கள் வந்தால் மட்டுமே கமர்ஷியல் சிலிண்டர்கள் நிரப்பி டீலர்களுக்கு விநியோகம் செய்ய முடியும் என, பிளான்ட் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

