/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தலித் புறக்கணிப்பு: காங்., ஆர்ப்பாட்டம்
/
தலித் புறக்கணிப்பு: காங்., ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 10, 2025 08:46 AM

புதுச்சேரி : புதுச்சேரி மாநில காங்., எஸ்.சி., எஸ்.டி., பிரிவு சார்பில், அமைச்சரவையில் தலித் சமூகத்திற்கு இடம் வழங்காததை கண்டித்து ஜென்ம ராக்கினி மாதா கோவில் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
காங்., எஸ்.சி., எஸ்.டி., பிரிவு மாநில தலைவர் ஜெயபால் தலைமை தாங்கினார்.
காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் தலைவர் சுப்ரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் கார்த்திகேயன், அனந்தராமன், சீனியர் துணைத் தலைவர் தேவதாஸ், மகளிர் காங்., தலைவி நிஷா உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அமைச்சரவையில் தலித் சமூகத்திற்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும். இல்லையேல் வரும் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவதாக கூறி, நிர்வாகிகள் கோஷமிட்டனர்.

