ADDED : ஜன 09, 2024 07:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை அமைச்சர் தேனீஜெயக்குமார் ஆய்வு செய்தார்.
புதுச்சேரியில் பெய்த கனமழையால், அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தது. மேலும், மணிலா, காராமணி, உளுந்து பயிர்களும் மழை நீர் தேங்கி சேதமடைந்துள்ளன.
கரிக்கலாம்பாக்கம், சேலியமேடு, பாகூர், வில்லியனுார் உள்பட பல்வேறு பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் ஆய்வு செய்தார். அப்போது, பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்குவது தொடர்பாக முதல்வரிடம் கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என, விவசாயிகளிடம் அவர், உறுதியளித்தார்.