/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மின்விளக்கு கோபுரம் சேதம்: பொதுமக்கள் சாலை மறியல்
/
மின்விளக்கு கோபுரம் சேதம்: பொதுமக்கள் சாலை மறியல்
ADDED : ஏப் 21, 2025 04:36 AM

பாகூர்: குடியிருப்புபாளையத்தில் கும்பாபிஷேக விழாவையொட்டி, வைக்கப்பட்டிருந்த அலங்கார மின் விளக்கு கோபுரத்தை, சேதப்படுத்திய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாகூர் அடுத்துள்ள குடியிருப்பாளையம் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, 23ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி, கோவில் மற்றும் வீதிகள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விழுப்புரம் - நாகப்பட்டினம் புறவழிச்சாலை குடியிருப்புபாளையம் சந்திப்பில் அமைக்கப்பட்டிருந்த எல்.இ.டி., மின்விளக்கு கோபுரத்தை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் அடித்து உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.
இதனால், ஆத்திரமடைந்த குடியிருப்புபாளையம் கிராம மக்கள் நேற்று காலை புறவழிச்சாலை குடியிருப்புபாளையம் சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த பாகூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அலங்கார மின் விளக்கு கோபுரத்தை சேதப்படுத்திய நபர்களை கண்டு பிடித்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவிழா முடியும் வரை பாதுகாப்பு பணியில் போலீசாரை ஈடுபடுத்த வேண்டும் என்றனர்.''
உரிய நடவடிக்கை எடுக்கப்பதாக, போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து, பொது மக்கள் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

