/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தாய் கண்டித்ததால் மகள் துாக்கிட்டு தற்கொலை
/
தாய் கண்டித்ததால் மகள் துாக்கிட்டு தற்கொலை
ADDED : பிப் 05, 2024 03:48 AM
அரியாங்குப்பம், : கடையை மூடி விட்டு ஏன் வேலைக்கு சென்றாய் என தாய் கேட்டதால் கோபத்தில் மகள் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தவளக்குப்பம் மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் குணசேகரன். இறந்து விட்டார். இவரது மகள் தேவிஸ்ரீ, 17; தவளக்குப்பம் பேக்கரி கடையில் வேலை செய்து வந்தார். இவரது தாய் சுதா, தனது வீட்டிலேயே கவரிங் நகைகள் வாடகை விடும் கடை நடத்தி வருகிறார்.
கவரிங் கடையை திறந்து வைக்கும்படி தனது மகள் தேவிஸ்ரீயிடம் கூறி விட்டு சுதா முன்பு வேலை செய்த இடத்திற்கு சென்றுள்ளார்.தேவிஸ்ரீ காலை மட்டும் கடையை திறந்துவிட்டு ,மதியம் மூடிவிட்டு பேக்கரி கடைக்கு சென்றார்.
வீட்டுக்கு வந்த அவரது தாய் ஏன் கடையை அரை நாள் மட்டும் திறந்தாய் என மகளை கண்டித்தார். இதில் மனமுடைந்த தேவிஸ்ரீ வீட்டில் அறையில் துாக்கு போட்டு கொண்டார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்களின் உதவியுடன் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

