sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மகளுக்கு நிச்சயதார்த்தம் தந்தை திடீர் தற்கொலை

மகளுக்கு நிச்சயதார்த்தம் தந்தை திடீர் தற்கொலை

மகளுக்கு நிச்சயதார்த்தம் தந்தை திடீர் தற்கொலை


ADDED : ஜன 28, 2024 04:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 28, 2024 04:46 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மகள் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் தந்தை துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குருசுக்குப்பம் தில்லை நாடார் வீதியைச் சேர்ந்தவர் எதுவார், 56; வெளிநாடு வேலைக்கு சென்று தற்போது வீடு திரும்பியுள்ளார். இவரது மூத்த மகள் நிச்சயதார்த்தம் நேற்று முன்தினம் நடந்தது.

நிச்சயதார்த்தம் முடிந்து, இரவு 9:00 மணிக்கு வீட்டில் உள்ள அவரது அறைக்கு துாங்க சென்றார். நள்ளிரவு வரை அவரது அறையில் மின் விளக்கு எறியவே, அவரது மனைவி சித்தி அலீமா சென்று பார்த்தார். அப்போது எதுவார் அவரது அறையில் உள்ள மின்விசிறியில் வேட்டியால் துாக்கிட்டு தொங்கினார்.

அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் சோலை நகர் புறக்காவல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us