/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மீன்பண்ணையில் இறந்த மீன்கள்; ஜே.சி.பி., மூலம் அகற்றம்
/
மீன்பண்ணையில் இறந்த மீன்கள்; ஜே.சி.பி., மூலம் அகற்றம்
மீன்பண்ணையில் இறந்த மீன்கள்; ஜே.சி.பி., மூலம் அகற்றம்
மீன்பண்ணையில் இறந்த மீன்கள்; ஜே.சி.பி., மூலம் அகற்றம்
ADDED : நவ 20, 2024 06:27 AM

புதுச்சேரி : தேங்காய்த்திட்டு மீன் பண்ணை குட்டைகளில் இறந்து மிதந்த மீன்கள் நேற்று அகற்றப்பட்டது.
தேங்காயத்திட்டில்மீன்வளத்துறையின் கழிமுக மீன் பன்ணை உள்ளது.
கடந்த காலங்களில் இங்கு மீன் குஞ்சுகள் வளர்த்து, மொத்தமாக விற்பனை செய்யப்படும். ஆட்கள் பற்றாக்குறையால் தற்போது மீன் குஞ்சுகள் வளர்ப்பது கிடையாது.
தேங்காய்த்திட்டு மாங்குரோஸ் காடுகள் ஓரம் மீன் பண்ணை இருப்பதால், பண்னை குட்டைகளில் ஏராளமான மீன்கள் வளர்ந்து வருகிறது.நேற்று முன்தினம் மீன்பண்ணை குட்டையில் இருந்த மீன்கள் திடீரென இறந்து கரை ஒதுங்கியது.
மீன்கள் இறப்பிற்கான காரணம் தெரியவில்லை. மீன்கள் இறந்து மிதந்தால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியது. மீன்வளத்துறை சார்பில் ஜே.சி.பி., மூலம் பண்ணை குட்டையில் மிதந்த 300 கிலோ மீன்களை அப்புறப்படுத்தி பள்ளம் தோண்டி புதைத்தனர். கடந்த வாரம் பெய்த மழையால், மீன் பண்ணை ஓரம் செல்லும் கழிவுநீர் வாய்க்காலில் வரும் தண்ணீர் பண்ணை குட்டையில் கலந்து அதன் காரணமாக இறப்பு ஏற்பட்டு இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

