/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நவோதயா பள்ளி சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கெடு நீட்டிப்பு
/
நவோதயா பள்ளி சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கெடு நீட்டிப்பு
நவோதயா பள்ளி சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கெடு நீட்டிப்பு
நவோதயா பள்ளி சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கெடு நீட்டிப்பு
ADDED : ஆக 15, 2025 03:16 AM
புதுச்சேரி:நவோதயா வித்யாலயா பள்ளியில் 6ம் வகுப்பு சேர்க்கைக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
காலாப்பட்டு ஜவகர் நவோதயா வித்யாலயா முதல்வர் கண்ணதாசன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
வரும் 2026-27ம் கல்வியாண்டில் ஜவகர் நவோதயா வித்யாலயாவில் 6ம் வகுப்பு சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய காலவரம்பு, நிர்வாக காரணங்களுக்காக, வரும் 27ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே தேர்வாளர்கள் www.navodaya.gov.in அல்லது https:// cbseitems.rcil.gov.in/nvs என்ற இணையதள மூலமாக இலவசமாக விண்ணப் பிக்கலாம்.
இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.