/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போட்டி தேர்வு பயிற்சி வகுப்பில் சேர்வதற்கு காலக்கெடு நீட்டிப்பு
/
போட்டி தேர்வு பயிற்சி வகுப்பில் சேர்வதற்கு காலக்கெடு நீட்டிப்பு
போட்டி தேர்வு பயிற்சி வகுப்பில் சேர்வதற்கு காலக்கெடு நீட்டிப்பு
போட்டி தேர்வு பயிற்சி வகுப்பில் சேர்வதற்கு காலக்கெடு நீட்டிப்பு
ADDED : மே 29, 2025 01:23 AM
புதுச்சேரி: மத்திய மற்றும் மாநில அரசுகள் நடத்தும் போட்டித் தேர்வுக்கான நேரடி பயிற்சி வகுப்பில் சேர்வதற்கு மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்க தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக மக்கள் தொடர்பு பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி பல்கலைக் கழகம், நீதி மற்றும் சட்ட வழங்கல் அமைச்சகம், மத்திய அரசின் மாற்றுத் திறனாளிகளுக்கான மேம்பாட்டு துறை மூலம் ஓராண்டு முழு நேர நேரடி பயிற்சி வகுப்பில் சேர்வதற்கு மாற்று திறனாளிகள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வரும் ஜூன் 10ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பட்டப்படிப்பு முடித்த, 20 முதல் 41 வயது வரையுள்ள, ஊனத்தின் தன்மை 40 சதவீதத்திற்கு மேல் உள்ளவர்களும், ஊனமுற்றோருக்கான உரிமைச்சட்டம் 2016ல் குறிப்பிடப்பட்டுள்ள 21 வகையான மாற்றுத்திறனாளிகள் https://forms.gle/7GrACguPiRVrWHfY8 என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் போது, மத்திய அரசின் மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு அடையாள அட்டை, ஆதார் கார்டு, 10ம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு, சாதி, வருமானம் உள்ளிட்ட சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். வருமானம் ரூ. 8 லட்சத்திற்குள் உள்ளவர்களுக்கு மாதாந்திர ஊக்கத்தொகை வழங்கப்படும்.
மேலும், தகவல்களுக்கு Chidambara.cseip@pondiuni.ac.in, madansaratha@pondiuni.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளவும்.