/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
/
தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
ADDED : ஜூலை 12, 2025 03:17 AM
புதுச்சேரி: தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் விண்ணப்பிக்க வரும் 21ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக முதுநிலை சேர்க்கை குழு ஒருங்கிணைப்பாளர் செய்திக் குறிப்பு:
தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் உள்ள எம்.டெக்., எம்.சி.ஏ., எம்.பி.ஏ., எம்.எஸ்சி.,மெட்ரீயல் சயின்ஸ் டெக்னாலஜி படிப்பில் சேர கடந்த 1ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன. மாணவர்கள் ஆர்வமாக விண்ணப்பித்து வருகின்றனர். விண்ணப்பங்களை ஜூலை 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு இருந்த நிலையில், தங்களுக்கு மேலும் கால அவகாசம் வேண்டும் என, மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனை ஏற்று மாணவர்கள் விண்ணப்பிக்க வரும் 21ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டடுள்ளது. எனவே மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பிற சான்றிதழ் நகல்களுடன் வரும் 24ம் தேதிக்குள் அலுவலகத்தில் நேரில் அல்லது அஞ்சல் வாயிலாக சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு www.ptuniv.edu.in அல்லது www.pgacpdy.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.