தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பி.டெக்., லேட்ரல் என்ட்ரி மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு 

 பி.டெக்., லேட்ரல் என்ட்ரி மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு 

 பி.டெக்., லேட்ரல் என்ட்ரி மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு 


ADDED : ஜூன் 06, 2026 08:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 06, 2026 08:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பி.டெக்., லேட்ரல் என்ட்ரி மாணவர் சேர்க்கைக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்க 11ம் தேதி வரை காலக்கெடுவை சென்டாக் நீட்டித்துள்ளது.

புதுச்சேரி பாலிடெக்னிக் கல்லுாரியில் டிப்ளமோ படித்த மாணவர்களு க்காக, 1 0 சதவீத பி.டெக்., இடங்கள் அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லுாரிகளில் ஆண்டு தோறு ம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இவர்கள் பி.டெக்., படிப்பில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரலாம்.

இவர்களுக்கான சென்டாக் லேட்ரல் என்ட்ரி சேர்க்கை விண்ணப்ப படிவங்கள், ஆன் - லைனில் (www.centacpuducherry.in) கடந்த மாதம் 25ம் தேதி வினியோகிக்கப்பட்டு வருகின்றன. வரும் 8ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த காலக்கெடு வரும் 11ம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம் எஸ்.சி., - எஸ்.டி., மாற் றுத்திறனாளி மாணவர்கள் 500 ரூபாய் கட்டணமும், இதர பிரிவு மாணவர்கள் 1,000 ரூபாய் விண்ணப்ப கட் டணம் செலுத்த வேண்டும்.

எவ்வளவு சீட்டு புதுச்சேரியில் மூன்று அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் மொத்தம் 399 பி.டெக்., லேட்ரல் என்ட்ரி சீட்டுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மாப் அப் கவுன்சிலிங்கிற்கு பிறகு காலியிடங்கள் இருந்தால், பிற மாநில மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பிற மாநில மாணவர்களும் 1,500 ரூபாய் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us