ADDED : ஜூன் 06, 2026 08:58 AM

வில்லியனுார்: நோயாளிகளுக்கு ரவிக்குமார் எம்.எல்.ஏ., ஊட்டச்சத்து தொகுப்பு பைகளை வழங்கினார்.
வில்லியனுார் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் ஆகியன இணைந்து வில்லியனுார் பகுதியில் காசநோய் தொடர் சிகிச்சை பெற்று வரும் 50க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை முகாம் மற்றும் ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
வில்லியனுார் முருகன் கோவில் சமூதாய நலக்கூடத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு சுகாதார நிலைய தலைமை டாக்டர் பாமகள் கவிதை தலைமை தாங்கினார். செவிலியர்கள் தேவி, நீலகன்னி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக ரவிக்குமார் எம்.எல்.ஏ., பங்கேற்று காசநோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை முகாமை துவக்கி வைத்தார். தொடர் சிகிச்சை பெற்றுவரும் 50க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்புகளை வழங் கினார். நிகழ்ச்சியில் காசநோய் மற்றும் சுகாதார பணியாளர்கள் சுதா, ஞானசெல்வி, மணிமாறன் உட்பட பலர் பங்கேற்றனர்.
