/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காது கேளாதோர் பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் போட்டி
/
காது கேளாதோர் பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் போட்டி
ADDED : ஜூலை 11, 2025 04:13 AM

புதுச்சேரி:புதுச்சேரியில் காது கேளாதோர் பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில் தேர்வு பெற்றவர்கள் தேசிய அளவிலான பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கின்றனர்.
காது கேளாதோர் அறக்கட்டளை சார்பில், காது கேளாதோர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி, கடந்த 6ம் தேதி, புதுச்சேரி லோட்டஸ் பேட்மிண்டன் கிளப்பில் நடந்த சாம்பியன்ஷிப் போட்டியில் 32 ஆண்கள், 32 பெண்கள் என மொத்தம் 64 பேர் பங்கேற்றனர்.
இப்போட்டியில் ஆண்கள் பிரிவில், நித்யானந்தம், சூரியவிமல், கினோஜன், ரோஹிந்த், பெண்கள் பிரிவில், பிரேம் தேவதர்ஷினி, சரோஜினி தேவி, இஸபெல், ரேணுகாதேவி ஆகியோர் வெற்றி பெற்றனர்.
இதன் மூலம் இவர்கள், வரும் 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை சென்னையில் நடைபெறும் தேசிய அளவிலான காது கேளாதோர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2025 போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.
முன்னதாக, போட்டியின் சிறப்பு விருந்தினர்களாக ஜி.பி. லெதர்ஸ் பன்னீர் செல்வம், புஷ்பா ஜூவல்லர்ஸ் முகேஷ் ஜெயின், புதுச்சேரி கிராமணி மற்றும் நாடார் சங்கத் தலைவர் புரந்தரதாசன், புதுச்சேரி ரோட்டரி கிளப் செல்வகுமார், ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வீரர்களை வாழ்த்தி உற்சாகப்படுத்தினர்.
இதில், காது கேளாதோர் அறக்கட்டளை மேலாளர் ஞானவேல், ஊழியர்கள் அமர்நாத், அஜித்குமார் மொழிப் பெயர்ப்பாளர் சொர்ணலட்சுமி ஹேமச்சந்திரன், காது கேளாதோர் விளையாட்டு சங்க உறுப்பினர் பாசித் மற்றும் தன்னார்வலர்கள் என சுமார் 150 பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.