/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காதுகேளாதோர் சைகை மொழி விழிப்புணர்வு வாரம்
/
காதுகேளாதோர் சைகை மொழி விழிப்புணர்வு வாரம்
ADDED : அக் 02, 2024 02:24 AM

புதுச்சேரி : டெப் எனெபில்டு பவுன்டேஷன் மற்றும் புதுச்சேரி காது கேளாதோர் விளையாட்டு கவுன்சில் சார்பில், கடந்த 23 முதல் 29ம் தேதி வரை, சர்வதேச காதுகேளாதோர் சைகை மொழி விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்பட்டது.
காது கேளாதோரின் சைகை மொழிகளை பொதுமக்கள் புரிந்து கொள்ளவதற்காக, டெப் எனெபில்டு பவுன்டேஷன் பொறுப்பாளர்கள்தனியார் நிறுவனங்களுக்கு சென்று, ஊழியர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை மற்றும் பாண்டி மெரினாவிலும், சைகை மொழி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கடந்த 27ம் தேதி டெப் எனெபில்டு பவுன்டேஷன் பொறுப்பாளர்கள் ஞானவேல், சொர்ணலட்சுமி, ஆஜித்குமார் ஆகியோர் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து,சைகை மொழிக்காக உருவாக்கிய DEF ISLமொபைல் ஆப்பை அறிமுகம் செய்து வைத்தனர்.
புதுச்சேரியில் காது கேளாதோர் மற்றும் பொதுமக்கள் சைகை மொழி குறித்த விழிப்புணர்வு பெற, மாதிரி பயிற்சி மையம் அமைத்து தர வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.
நிறைவாக காது கேளாதோர் சைகை மொழி விழிப்புணர்வு வார நிறைவு விழா, கீர்த்தி மகாலில் நடந்தது. ஓய்வு பெற்ற சப்இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் தலைமை தாங்கினார். காது கேளாதோர் விளையாட்டு கவுன்சில் செயலாளர் பாசித் முன்னிலை வகித்தார். டெப் எனெபில்டு பவுன்டேஷன் மேலாளர் ஞானவேல், சைகைமொழி டிரான்ஸ்லெக்டர் சொர்ணலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.

