/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலையோர வாகனத்தில் வியாபாரம்; வணிகர் கூட்டமைப்பு மறியல்
/
சாலையோர வாகனத்தில் வியாபாரம்; வணிகர் கூட்டமைப்பு மறியல்
சாலையோர வாகனத்தில் வியாபாரம்; வணிகர் கூட்டமைப்பு மறியல்
சாலையோர வாகனத்தில் வியாபாரம்; வணிகர் கூட்டமைப்பு மறியல்
ADDED : மார் 13, 2024 06:51 AM
புதுச்சேரி : சாலையோர வாகனத்தில் நடக்கும் வியாபாரத்தை தடுக்க கோரி வணிகர் கூட்டமைப்பினர் மறியல் போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரியில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு பலருக்கு வேலை பறிபோனது. இதனால் பலர் சுய தொழில் துவக்கினர். காய்கறி, பழங்கள், துணி, மளிகை என எது கிடைக்கிறதோ அதை வாங்கி ஒரு டாடா ஏஸ் வாகனத்தில் வைத்து, சாலையோரம் நிறுத்தி விற்பனை செய்கின்றனர்.
பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களும் தங்களின் வாகனங்களை சாலையில் நிறுத்துவதால், பின்னால் வரும் வாகனங்கள் மோதி விபத்தில் சிக்கி கொள்கின்றனர்.
சாலையில் வாகனங்களில் நடக்கும் வியாபாரத்தால், நிரந்தர கடை வைத்து வியாபாரம் செய்வோர் பாதிக்கப்படுவதாகவும், அனுமதியின்றி ஒலி பெருக்கி பயன்படுத்துவதை தடுக்க கோரி புதுச்சேரி வணிகர் கூட்டமைப்பினர் உழவர்கரை நகராட்சி எதிரில் நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது திடீரென விழுப்புரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜன் பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு வார காலத்திற்குள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதை ஏற்று வியாபாரிகள் கலைந்து சென்றனர்.

