/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அ.தி.மு.க., நிர்வாகி மீது கொலை மிரட்டல் புகார்
/
அ.தி.மு.க., நிர்வாகி மீது கொலை மிரட்டல் புகார்
ADDED : ஜன 28, 2025 05:36 AM

கடலுார்: முதியோர் இல்ல நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்த அ.தி.மு.க., நிர்வாகி மீது நடவடிக்கை கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
திருவதிகையை சேர்ந்த தியாகராஜன், கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு:
திருவதிகையில் அம்மா என்ற பெயரில் முதியோர் இல்லம் நடத்தி வருகிறேன். முதியோர் இல்லத்தை விரிவாக்கம் செய்ய பண்ருட்டி அ.தி.மு.க., நகர பொறுப்பில் உள்ள நிர்வாகி ஒருவர், கடந்த 2008ம் ஆண்டு ஒரு குறிப்பிட்ட தொகையை கடன் கொடுத்தார். அதற்காக, முதியோர் இல்ல இடத்திற்கு 'பவர்' வாங்கிக் கொண்டார்.
இந்நிலையில், அந்த நபர் முதியோர் இல்லத்தை அபகரிக்கும் நோக்கில் அடியாட்களுடன் கொலை மிரட்டல் விடுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுத்து முதியோர் இல்லத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

