UPDATED : அக் 09, 2026 05:59 PM
ADDED : அக் 09, 2026 05:56 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: லாஸ்பேட்டை, காமன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் கார்த்திக் பிரான்சிஸ், 22; தனியார் கபேவில் கேஷியராகப் பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த 7ம் தேதி இரவு வேலை முடிந்து, பைக்கில் வீட்டிற்கு வந்து, வாசலில் பைக்கை நிறுத்தினார். அப்போது, லாஸ்பேட்டை, வீரப்பத்திரசாமி கோவில் தெருவைச் சேர்ந்த முகிலன் என்பவர், என்னடா என்னை பார்த்து முறைக்கிறாய் என, கேட்டு திட்டியதுடன், என்னிடம் பிரச்னை செய்தால் உன்னை குடும்பத்துடன் வெடிகுண்டு வீசி கொலை செய்து விடுவேன் என மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
கார்த்திக் பிரான்சிஸ் புகாரின் பேரில், முகிலன் மீது லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
