/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மதுக்கடை கேஷியருக்கு கொலை மிரட்டல்
/
மதுக்கடை கேஷியருக்கு கொலை மிரட்டல்
ADDED : டிச 28, 2024 05:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி; ஓசியில் மதுபானம் தர மறுத்த மதுபான ஊழியரை கத்தியை காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், கூத்தப்பாக்கம் பள்ளிக்கூட வீதியைச் சேர்ந்தவர் ராஜாராம், 50.
இவர் சேதராப்பட்டில் உள்ள தனியார் மது கடையில் கேஷியராக வேலை செய்து வருகிறார்.
மது கடைக்கு நேற்று முன்தினம் காலை, அட்சரம்பட்டைச் சேர்ந்த சுதாகர் என்பவர் வந்து கேஷியர் ராஜாராமிடம் ஓசியில் மதுபானம் கேட்டார். அதற்கு அவர் தர மறுக்கவே கத்தியை காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு சென்றார்.
இதுகுறித்து ராஜராம் கொடுத்த புகாரின் பேரில் சேதராப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து, சுதாகரை தேடி வருகின்றனர்.

