/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எம்.எல்.ஏ., டிரைவருக்கு கொலை மிரட்டல்
/
எம்.எல்.ஏ., டிரைவருக்கு கொலை மிரட்டல்
ADDED : ஜூன் 01, 2025 04:15 AM
புதுச்சேரி: எம்.எல்.ஏ., கார் டிரைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
காலாப்பட்டு தொகுதி எம்.எல்.ஏ., கல்யாணசுந்தம். இவரது கார் டிரைவராக இருந்து வருபவர், புதுச்சேரி லட்சுமி நகரை சேர்ந்தவர் வினோத், 45. இவரை, மொபைல் போனில் தொடர்பு கொண்ட கருவடிக்குப்பத்தை சேர்ந்த தனசேகர் என்பவர், எம்.எல்.ஏ.,விற்கு கார் ஓட்டிக்கூடாது என, மிரட்டியுள்ளார்.
இந்நிலையில், தவளக்குப்பத்தில் உள்ள கார் சர்வீஸ் ஸ்டேஷனில் இருந்து நேற்று முன்தினம் வினோத், காரை எடுத்து சென்றார். முதலியார்பேட்டை புவன்கரே சாலை வழியாக சென்ற போது, தனசேகர் தனது ஆதரவாளர்களுடன், காரை வழிமறித்து நிறுத்தினர். நான் ஏற்கனவே கூறியும் நீ எம்.எல்.ஏ., காரை ஓட்டி வருகிறார். இனிமேல் அவரது காரை நீ ஓட்டினால் உன்னை கொலை செய்து விடுவேன் என, மிரட்டினார்.
வினோத் புகாரின் பேரில், முதலியார்பேட்டை இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்கு பதிந்து, தனசேகர் மற்றும் அவரது ஆதரவாளர்களை தேடி வருகின்றனர்.