ADDED : நவ 04, 2025 01:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி:  சமூக ஆர்வலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை, போலீசார் தேடிவருகின்றனர்.
உப்பளத்தை சேர்ந்தவர் கோகுல் காந்திநாத், 52;  சமுக ஆர்வலர் . நேற்று முன்தினம் கொக்கு பார்க் அருகே தண்ணீர் குழாயில், தண்ணீர் பிடிக்க சென்றார். அந்த இடத்தில், ஆடு வெட்டிய கழிவுகள் கிடந்தது.
அருகில், இருந்த ஆட்டுக்கறி கடையில், இருந்த ஒருவரிடம் கேட்டார்.அந்த நபர், தகாத வார்த்தையால், திட்டி, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து, கோகுல் காந்திநாத் கொடுத்த புகாரின் பேரில், டி. நகர் போலீசார் வழக்குப் பதிந்து, அந்த நபரை தேடிவருகின்றனர்.

