ADDED : ஜன 29, 2025 05:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : முதியவருக்கு கொலை மிரட்டல் விடுத்த, கார் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி முத்திரையர்பாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ், 71. அங்குள்ள கோவில், புதுப்பிப்பது தொடர்பாக, ஊரில் உள்ளவர்களிடம் நேற்று முன்தினம் பேசி கொண்டிருந்தார்.அந்த வழியாககாரில் சென்ற, அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம், காரை நிறுத்தி விட்டு, செல்வராஜிக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றார். இதுகுறித்து, அவர் கொடுத்த புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து, ஆறுமுகத்தை தேடி வருகின்றனர்.

