/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கரும்பு வெட்டும் மேஸ்திரிக்கு கொலை மிரட்டல்; வாலிபர் கைது
/
கரும்பு வெட்டும் மேஸ்திரிக்கு கொலை மிரட்டல்; வாலிபர் கைது
கரும்பு வெட்டும் மேஸ்திரிக்கு கொலை மிரட்டல்; வாலிபர் கைது
கரும்பு வெட்டும் மேஸ்திரிக்கு கொலை மிரட்டல்; வாலிபர் கைது
ADDED : ஜன 22, 2024 06:08 AM
நெட்டப்பாக்கம் : கரும்பு வெட்டும் மேஸ்திரிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஏரிப்பாக்கம் பழைய காலனியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி, 52; கரும்பு வெட்டும் மேஸ்திரி. இவரிடம் கடந்த 11ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த குரு, 44, என்பவர் கரும்பு வெட்ட ஆட்கள் அழைத்து வருவதாக கூறி, 20 ஆயிரம் ரூபாய் வாங்கி சென்றார். ஆனால் அவர் ஆட்களை அனுப்பவில்லை.
இதுகுறித்து சுந்தரமூர்த்தி, நேற்று முன்தினம் குருவிடம் கேட்டார்.
அன்று இரவு சுந்தரமூர்த்தி வீட்டில் இருந்த போது, அவரது வீட்டிற்கு வந்த குருவின் மகன் பெரியதுரை, 22, சுந்தரமூர்த்தியை திட்டி, பாக்கெட்டில் வைத்திருந்த பட்டாசை கொளுத்தி அவர் அருகில் வீசிவிட்டு கொலை மிரட்டல் விடுத்து, சென்றார்.
சுந்தரமூர்த்தி புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் பிரியா வழக்குப் பதிந்து பெரியதுரையை கைது செய்தனர்.