/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சபரிமலை கூட்ட நெரிசலில் உயிரிழப்பு: பேரிடர் ஆணையத்திற்கு புதுச்சேரி பா.ஜ., மனு

ADDED : நவ 20, 2025 06:03 AM
புதுச்சேரி: சபரிமலை கூட்ட நெரிசலில் பக்தர் இறந்த சம்பவத்தில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் நடவடிக்கை எடுக்க பா.ஜ., கோரிக்கை விடுத்துள்ளது.
பா.ஜ., மாநில சிறப்பு அழை ப்பாளர் வீரராகவன், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய சேர்மனுக்கு அனுப்பியுள்ள மனு: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு, லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர்.
கூட்ட நெரிசல் மேலாண்மை குறித்து நீதிமன்றம் பல உத்தரவுகள் பிறப்பித்தும் கேரளா அரசு செய்யவில்லை. அப்பச்சி மேட்டில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, கோழிக்கோடு, எடக்குளத்தை சேர்ந்த சதி, 59, என்ற பெண், மயங்கி விழுந்து இறந்தார். இப்பிரச்னை குறித்து, மத்திய அரசின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், விசாரித்து பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.