ADDED : நவ 20, 2025 06:02 AM
புதுச்சேரி: பெட்டிக்கடையில் தடைசெய்யப்பட்ட குட்கா, சிகரெட்கள் விற்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களான குட்கா, சிகரெட் விற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, புகையிலை தடுப்பு மைய அதிகாரி சூரியகுமார் மற்றும் டி.நகர் உதவி சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தகிருஷ்ணன் ஆகியோர் நேற்று முன்தினம் கதிர்காமம் அரசு மருத்துவமனை அருகில் உள்ள பெட்டிக்கடைகளில் சோதனை நடத்தினர்.
கடைகளில் குட்கா பாக்கெட்டுகள், சிகரெட் பதுக்கி வைத்து விற்பனை செய்த, தட்சிணாமூர்த்தி நகரை சேர்ந்த சேகர், 60; பிரியதர்ஷினி நகரை சேர்ந்த மணிமாறன், 50; கதிர்காமத்தை சேர்ந்த சரத்குமார், 32; ஆகியோரை கைது செய்தனர்.
தொடர்ந்து, ஜிப்மர் மருத்துவமனை அருகில் உள்ள பெட்டிக்கடையில், குட்கா, சிகரெட் விற்ற, கோரிமேடு இஸ்ரேல் நகரை சேர்ந்த நெடுஞ்செழியன், 35; குறிஞ்சி நகரை சேர்ந்த ஆனந்த், 36; காந்தி நகரை சேர்ந்த கஜேந்திரன், 36, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
கடைகளில் இருந்த குட்கா மற்றும் சிகரெட் பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

