/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அனுமதியின்றி வைக்கும் பேனர்களை அகற்ற முடிவு
/
அனுமதியின்றி வைக்கும் பேனர்களை அகற்ற முடிவு
ADDED : ஜன 22, 2025 09:08 AM

புதுச்சேரி : சாலை பாதுகாப்பு தொடர்பாக, ஆலோசனைக்குழு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் குலோத்துங்கன் தலைமை தாங்கினார்.
போக்குவரத்து சீனியர் எஸ்.பி., பிரவீன்குமார் திரிபாதி, எஸ்.பி.,க்கள் செல்வம், மோகன்குமார் உட்பட பொதுப்பணித்துறை, போக்குவரத்து, மின் துறை, நலவழித்துறை அதிகாரிகள், நகராட்சி ஆணையர்கள், பஸ், லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அனுமதியின்றி, பொது மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில், பொது இடங்களில் வைத்துள்ள பேனர்கள், கட் அவுட்கள், கொடிகளை அகற்றுவது. நகரப்பகுதியில் தற்போது, நிலவி வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது. ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, சாலை விதிகளை கடைபிடிக்காமல் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது.
சாலை மேம்பாட்டு பணிகளை விரைந்து முடிப்பது. ஸ்மார்ட் திட்டப் பணிகளை தீவிரப்படுத்துவது, இரு சக்கர வாகனம், கார், ஆட்டோ ஆகிய வாகனங்களை நிறுத்தும் இடங்களில் கட்டுப்பாடு விதிப்பது. ஹெல்மெட் கட்டயமாக அணிய வலியுறுத்தல் உள்ளிட்டவைகள் குறித்து, கூட்டத்தில், ஆலோசனை செய்யப்பட்டது.