/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பறிமுதல் போதை பொருட்களை மைய குடோனில் வைக்க முடிவு
/
பறிமுதல் போதை பொருட்களை மைய குடோனில் வைக்க முடிவு
பறிமுதல் போதை பொருட்களை மைய குடோனில் வைக்க முடிவு
பறிமுதல் போதை பொருட்களை மைய குடோனில் வைக்க முடிவு
ADDED : பிப் 16, 2026 07:03 AM
புதுச்சேரி: பறிமுதல் செய்யப்படும் போதை பொருட்களை மையப்படுத்தப்பட்ட குடோன்களில் இனி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இன்றைய சூழலில் போதைப் பொருட்கள் பல்வேறு வடிவங்களில் சர்வ சாதாரணமாகப் புழக்கத்தில் இருக்கின்றன. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் மாணவர்களை இலக்காகக் கொண்டு கஞ்சா, அபின் போதை பொருட்களை விற்கின்றனர்.
போதை பொருட்களை விற்பது கடுமையான தண்டனைக்குரிய குற்றமாகும்.கைப்பற்றப்படும் போதைப்பொருளின் அளவைப் பொறுத்து, 6 மாதங்கள் முதல் 20 ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும், 10,000 முதல் 2 லட்சம் வரை ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம். வணிக ரீதியான கடத்தலுக்கு ஆயுள் தண்டனை கூட வழங்கப்படலாம்.
போதை பொருட்களை பறிமுதல் செய்யும் புதுச்சேரி போலீசார் அதனை சீல்லிட்டு, நீதிமன்றத்தில் ஒப்படைக்கின்றனர். அதில் இருந்து சில போதை பொருட்கள் மட்டும் ஆய்வகத்திற்கும் அனுப்பப்படுகிறது. மற்றவை நீதிமன்றத்தில் இருக்கும். இந்த நடைமுறையில் தற்போது மாற்றம் செய்யப்பட உள்ளது.
பறிமுதல் செய்யப்படும் போதை பொருட்கள் இனி மையப்படுத்தப்பட்ட குடோனில் பலத்த இரும்பு கம்பிகளுக்கு பின்னால் வைக்க புதுச்சேரியில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு கவர்னர் கைலாஷ்நாதனும் ஒப்புதல் அளித்த நிலையில், லாஸ்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் இரண்டாம் தளத்தில் ஏற்படுத்தப்பட உள்ளது.
இதன் பொறுப்பு அதிகாரியாக வடக்கு எஸ்.பி., நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்தியத்தில் மையப்படுத்தப்பட்ட குடோனில் பறிமுதல் செய்யப்படும் போதை பொருட்கள் வைக்க இடங்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், அவ்வப்போது இங்கிருந்து அழிக்கப்பட உள்ளது.

