/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி : எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி : எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி : எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி : எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : செப் 01, 2025 01:19 AM

திருபுவனை : மதகடிப்பட்டு பகுதியில் ரூ.35.42 லட்சம் செலவில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
திருபுவனை தொகுதி, மத கடிபட்டு மணக்குள விநாயகர் நகர் அருகில் பொதுப்பணித்துறை மூலம் ரூ. 35.42 லட்சம் திட்ட மதிப்பீட்டில் புதிய ஆழ்துளை கிணறு, குடிநீர் குழாய்கள் மற்றும் அதனை சார்ந்த பணிக ளுக்கான பூமிபூ ஜை விழா நடந்தது. விழாவிற்கு அங்காளன் எம்.எல்.ஏ., தலைமையேற்று பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார்.
பொதுப்பணித்துறை கிராம குடிநீர் திட்ட உதவிப்பொறியாளர் பீனாராணி, இளநிலைப் பொறியாளர் சுதர்சனம், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன் முன்னிலை வகித்தனர். உதவிப்பொறியாளர் மல்லிகார்ஜூனன், இளநிலைப் பொறியாளர் பாஸ்கர் மற்றும் கிராம பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இத்திட்டத்தின் மூலம் மதகடிப்பட்டு கிராமத்தில் உள்ள கோல்டன் சிட்டி, திருமுருகன் நகர், ஸ்ரீராமபுரம், ஆஞ்சிநேயர் அவென்யூ ஆகிய பகுதிகளில் வசிக்கும் 1000 பேர் பயன்பெறுவர்.