தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/இந்திய கடற்படையின் சீ விஜில் பாதுகாப்பு ஒத்திகை நிறைவு

இந்திய கடற்படையின் சீ விஜில் பாதுகாப்பு ஒத்திகை நிறைவு

இந்திய கடற்படையின் சீ விஜில் பாதுகாப்பு ஒத்திகை நிறைவு


ADDED : நவ 27, 2026 05:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 27, 2026 05:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: இந்திய கடற்படை சார்பில் நடந்த சீ விஜில் பாதுகாப்பு ஒத்திகை நேற்றுடன் நிறைவு பெற்றது.

இந்திய கடற்படை சார்பில், சீ விஜில் பாதுகாப்பு ஒத்திகை நேற்று முன்தினம் துவங்கியது. இந்திய கடற்படை, கடலோர காவல்படை இணைந்து, நேற்று முன்தினம் (25ம் தேதி) முதல் இரண்டு நாட்கள் சீ விஜில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை புதுச்சேரி மற்றும் தமிழகத்தில், நடந்தது. அதனையொட்டி புதுச்சேரியில், காலாப்பட்டு முதல் மூர்த்திகுப்பம் வரை கடலோர பகுதிகளில், கடலோர காவல் படை, துப்பாக்கிய ஏந்திய கமாண்டோ போலீசார் மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

புதுச்சேரி தலைமை செயலகம், சட்டசபை, அரவிந்தர் ஆசிரமம், அரசு மருத்துவமனை, மத்திய அரசு நிறுவனங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்கில் பாதுகாப்பு போடப்பட்டது. இதில் புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தை தாக்க தீவிரவாதிகள் போல் வேடமிட்டு வந்த மூன்று பேரை கடலுார் போலீசார் கைது செய்தனர். அதேபோல், ஆசிரம வாசலில், நான்கு பேரை பெரியகடை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் நேற்று நடந்த இரண்டாம் ஒத்திகையில் புதுச்சேரி கடலோர காவல் நிலைய போலீசார் 5 நாட்டிகள் மைல் தொலைவில் ரோந்துபணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றி திரிந்த படகு ஒன்றை சோதனையிட்டனர். அப்போது தீவிரவாதிகள் போல் வேடமிட்டு வந்த இரண்டு நபர்களை பிடித்தனர். அதே போல் மாலை 3.15 மணிக்கு அரவிந்தர் ஆசிரமத்தை தாக்க தீவிரவாதிகள் போல் வேடமிட்டு வந்த மூன்று பேரை பெரியகடை போலீசார் கைது செய்தனர். நேற்று இரவு 8 மணியுடன் இந்த இரண்டு நாள் ஒத்திகை நிறைவுபெற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us