/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மலர் கண்காட்சியில் பாதுகாப்பு அமைச்சர் ஆலோசனை
/
மலர் கண்காட்சியில் பாதுகாப்பு அமைச்சர் ஆலோசனை
ADDED : பிப் 05, 2025 06:01 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் மலர் கண்காட்சி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் 35 வது மலர், காய், கனி கண்காட்சிவரும், 7ம் தேதி மாலை 5:00 மணிக்கு துவங்குகிறது. இந்த கண்காட்சி வரும், 9 ம் தேதி வரை மொத்தம், 3 நாட்களுக்கு நடக்கிறது.
இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் சட்டசபையில் நடந்தது.
இதில் சட்டம் ஒழுங்கு டி.ஐ.ஜி., சத்திய சுந்தரம், சீனியர் எஸ்.பி. கலைவாணன், பிரவீன்குமார் திரிபாதி, நகராட்சி ஆணையர் கந்தசாமி, வனத்துறை அதிகாரி லட்சுமணன், வேளாண்துறை இயக்குனர் வசந்குமார் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கண்காட்சியில், சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து சீரமைப்பு, வாகன நிறுத்துமிடம், தீயணைப்பு, நகராட்சி மூலம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.