/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டில்லி குண்டு வெடிப்பு சம்பவம்: புதுச்சேரி காங்., கண்டனம்
/
டில்லி குண்டு வெடிப்பு சம்பவம்: புதுச்சேரி காங்., கண்டனம்
டில்லி குண்டு வெடிப்பு சம்பவம்: புதுச்சேரி காங்., கண்டனம்
டில்லி குண்டு வெடிப்பு சம்பவம்: புதுச்சேரி காங்., கண்டனம்
ADDED : நவ 13, 2025 06:51 AM
புதுச்சேரி: டில்லி குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு அகில இந்திய காங்., கமிட்டியின் புதுச்சேரி ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தலைநகரில் வரலாற்று சிறப்புமிக்க ரெட் போர்ட் பகுதியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் பலர் உயிரிழந்ததும், பலர் காயமடைந்ததும் நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா போன்ற உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் இப்படிப்பட்ட தீவிரவாதச் செயல்கள் நிகழ்வது மிகவும் வருத்தத்திற்குரியது; கடுமையாக கண்டிக்கத்தக்கது.
இப்படியான அசுரச் செயல்கள் நாட்டின் அமைதியையும் ஒற்றுமையையும் சிதைக்க நினைக்கும் முயற்சியாகும். இந்தியாவின் ஒற்றுமை, சமாதானம், மனிதநேயம் ஆகியவற்றை அழிக்க முயலும் தீவிரவாத சக்திகளை வேரோடு ஒழிக்க மத்திய அரசு மிகுந்த விழிப்புடன் செயல்பட வேண்டும்.
இதுபோன்ற சம்பவங்கள் இனி ஒருபோதும் நடக்காத வகையில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். காயமடைந்தோர் விரைவில் நலம் பெற வேண்டி பிரார்த்திக்கிறோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

