/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆந்திர அமைச்சருடன் டில்லி சிறப்பு பிரதிநிதி சந்திப்பு
/
ஆந்திர அமைச்சருடன் டில்லி சிறப்பு பிரதிநிதி சந்திப்பு
ஆந்திர அமைச்சருடன் டில்லி சிறப்பு பிரதிநிதி சந்திப்பு
ஆந்திர அமைச்சருடன் டில்லி சிறப்பு பிரதிநிதி சந்திப்பு
ADDED : அக் 15, 2025 11:08 PM
புதுச்சேரி: புதுச்சேரி மீனவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி, ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷை சந்தித்து, டில்லி சிறப்பு பிரதிநிதி மல்லாடி கிருஷ்ணா ராவ் கோரிக்கை விடுத்தார்.
ஆந்திரா எல்லையில் மீன்பிடித்த புதுச்சேரி மீனவர்களின் 4 படகுகளை ஆந்திர மீனவர்கள் சமீபத்தில் சிறை பிடித்தனர். அந்த படகுகளை விடுவிக்க கோரி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு, முதல்வர் ரங்கசாமி கடிதம் எழுதி இருந்தார்.
இந்நிலையில், புதுச்சேரி டில்லி சிறப்பு பிரதிநிதி மல்லாடி கிருஷ்ணாராவ் நேற்று விஜயவாடாவில் உள்ள அமைச்சர் நாரா லோகேஷை சந்தித்து பேசினார்.அப்போது, ஆந்திரா மீனவர்களால் சிறை பிடிக்கப்பட்ட புதுச்சேரி மீனவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரியும்,ஏனாம் தீவு- 5ல் உள்ள ஓ.என்.ஜி.சி., குழாய் வெடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை மனு அளித்தார்.
மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் நாரா லோகேஷ், கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.