/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரியாங்குப்பத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்
/
அரியாங்குப்பத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்
ADDED : அக் 15, 2025 11:08 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: அரசு இடத்தில் இருந்த ஆக்கிரமிப்பை வருவாய் துறையினர் நேற்று அதிரடியாக அகற்றினர்.
அரியாங்குப்பம், ஓடைவெளி, சுண்ணாம்பாறு கரையோரத்தில், அரசு புறம்போக்கு இடம் உள்ளது. அந்த இடத்தில், ஓடைவெளியை சேர்ந்த ஒருவர், ஒரு மாத்திற்கு முன்,சிமென்ட் சிலாப் மூலம் சுற்று சுவர் அமைத்து, ஆக்கிரமித்த்தார்.
அந்த ஆக்கிரமிப்பை அகற்றிக் கொள்ளுமாறு, வருவாய் துறையினர் அறிவுருத்தியும், அகற்றவில்லை. அதனையொட்டி, வருவாய் ஆய்வாளர் தன்ராஜ், சர்வேயர் சத்தியநாதன், கிராம நிர்வாக அதிகாரிகள் மதன், செல்வி ஆகியோர் அரசு இடத்தில்இருந்த ஆக்கிரமிப்பை போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினர்.