தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முதலியார்பேட்டை தொகுதிக்கு அமைச்சர் பதவி வழங்க வலியுறுத்தல்

முதலியார்பேட்டை தொகுதிக்கு அமைச்சர் பதவி வழங்க வலியுறுத்தல்

முதலியார்பேட்டை தொகுதிக்கு அமைச்சர் பதவி வழங்க வலியுறுத்தல்


ADDED : ஆக 22, 2026 11:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 22, 2026 11:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: முதலியார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ., வுக்கு அமைச்சர் பதவி அல்லது சட்சபையில் முக்கியத்துவம் வாய்ந்த பதவி வழங்க வேண்டும் என, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பா.ம.க., மாநில அமைப்பாளர் கோபி கோபாலகிருஷ்ணன் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், முதலியார்பேட்டை தொகுதியின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, முதல்வர் ரங்கசாமியிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவில், ‘முதலியார்பேட்டை தொகுதிக்கு 57 ஆண்டுகளாக அமைச்சர் பதவி அல்லது சட்சபையில் முக்கியத்துவம் வாய்ந்த பதவி வழங்கப்படவில்லை. எனவே, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், வெற்றி பெற்ற ஜான்குமார் எம்.எல்.ஏ.,வுக்கு அமைச்சர் பதவி அல்லது சட்டசபையில் முக்கியத்துவம் வாய்ந்த பதவி வழங்க வேண்டும் என, கூறப்பட்டிருந்தது.

கூட்டத்தில், என்.ஆர்.காங்., வீரபுத்திரன், குமரன், ரவி, பா.ஜ., சார்பில் செல்வகணபதி, பூபாலன், பாஸ்கரன், சின்னதம்பி, கிருஷ்ணமூர்த்தி, வழக்கறிஞர் செந்தில், அருள், பா.ம.க., சார்பில் தொகுதி அமைப்பாளர் சரவணன், தேன்மொழி, சீனுவாசன், வெற்றிவேலு, ரவி, தேவநாதன், சஜிதா, கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us