மேகதாது அணைக்கு எதிராக தீர்மானம் அனுமதி கோரி தி.மு.க., எம்.எல்.ஏ., மனு
மேகதாது அணைக்கு எதிராக தீர்மானம் அனுமதி கோரி தி.மு.க., எம்.எல்.ஏ., மனு
ADDED : ஆக 22, 2026 11:23 PM
புதுச்சேரி: கர்நாடக மாநிலம் மேகதாது பகுதியில் புதிய அணை கட்டும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுச்சேரி சட்டசபையில் தனிநபர் தீர்மானம் கொண்டு வர அனுமதிக்க வேண்டும் என, தி.மு.க., எம்.எல்.ஏ., கார்த்திக்கேயன் தற்காலிக சபாநாயகர் அன்பழகன் சந்தித்து மனு அளித்தார்.
மனுவில் கூறியிருப்பதாவது:
மேகதாது பகுதியில் புதிய அணை கட்டப்பட்டால் காவிரி கடைமடை பகுதியான புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாக நேரிடும். எனவே, மேகதாது பகுதியில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி சட்டப்சபையில் தீர்மானம் நிறைவேற்றுவதற்காக தனிநபர் தீர்மானம் கொண்டு வர அனுமதிக்க வேண்டும். இந்த தீர்மானத்தை நடப்பு சட்டசபையில் கூட்டத்தொடரிலே அரசு நிறைவேற்றி தர வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
