/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
100 நாள் வேலை தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க கோரிக்கை
/
100 நாள் வேலை தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க கோரிக்கை
100 நாள் வேலை தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க கோரிக்கை
100 நாள் வேலை தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க கோரிக்கை
ADDED : ஏப் 23, 2025 04:10 AM
பாகூர் : 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கான தினக்கூலியை, 600 ரூபாயாக உயர்த்த வேண்டும் என புதுச்சேரி விவசாய தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து மாநில பொதுச் செயலாளர் விஜயபாலன் வெளியிட்டுள்ள அறிக்கை; மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலமாக, கிராமப்புற ஏழை எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
குறிப்பாக, கணவனை இழந்த பெண்கள், ஆதரவற்றோருக்கு இத்திட்டம் மறுவாழ்வு அளித்து வருகிறது.
கிராமப்புற மக்களை வறுமையில் இருந்து மீட்டு, அவர்களுக்கு சமூக அந்தஸ்து கிடைக்க தான் இத்திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின் மீது புதுச்சேரி அரசு கூடுதல் கவனம் செலுத்திட வேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் விளம்பரப் பலகை வைத்து, பஞ்சாயத்துகளில் நடைபெறும் வேலையின் விவரங்களை தெரியப்படுத்திட வேண்டும்.
விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு, 100 நாள் வேலை என்பதை 150 நாட்களாக உயர்த்திடவும், நாள் கூலி 600 ரூபாயாக உயர்த்தி வழங்கிட வேண்டும். பணியின் போது, உயிரிழக்கும் தொழிலாளியின் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் நிவாரணம் வழஙக்க வேண்டும். கிராமப்புற ஏழை மக்களுக்கு இலவச மனை பட்டா, வீடு கட்ட மானியத்தை உடன் வழங்க அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

