ADDED : செப் 21, 2025 11:19 PM

திருபுவனை: சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் ஜே.சி.எம்., மக்கள் மன்றம் என்ற அமைப்பு மூலம் புதுச்சேரியில் காமராஜர் நகர்,பாகூர், திருபுவனை, உழவர்கரை, மங்கலம் ஆகிய தொகுதிகளில் பொது மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகிறார்.
இந்நிலையில் மழைக்காலம் தொடங்குவதையொட்டி, ஜே.சி.எம்., மக்கள் மன்றம் சார்பில், திருபுவனை தொகுதி முழுதும் கழிவுநீர் வாய்க்கால் துார்வாரும் பணி தொடங்கியது.
திருபுவனைபாளையம் விநாயகர் கோவில் நான்குமுனை சந்திப்பு அருகே நடந்த நிகழ்ச்சிக்கு அங்காளன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, மதகடிப்பட்டு பாளையம் ஊரல்குட்டையில் தொடங்கி கிழக்கே திருபுவனைபாளையம் வரை 2 கி.மீ., துாரத்திற்கு செல்லும் பிரதான கழிவுநீர் வாய்க்காலை ஜேசிபி மூலம் துார் வாரும் பணியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் திருபுவனை தொகுதி ஜே.சி.எம்., மக்கள் மன்ற நிர்வாகிகள், கிராம முக்கியஸ்தர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.