நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம் : கோர்காட்டில் வசிக்கும் இருளர் பழங்குடி மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க வலியுறுத்தி, எலிகளை வைத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
வி.சி., கட்சி பழங்குடியினர் விடுதலை இயக்கம் சார்பில், நடந்த ஆர்ப்பாட்டத்தில் இயக்க செயலாளர் ஏகாம்பரம் தலைமை தாங்கினார். ரவி, அழகப்பன், சித்ரா, சேகர், ரங்கநாதன், பாஸ்கர், வள்ளி, ரவி, மல்லிகா, சாந்தி, மலர், காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வி.சி., கட்சி துணை பொது செயலாளர் பாவாணன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் ஏம்பலம் தொகுதி கோர்காடு ஏரிக்கரையோரம் வசிக்கும் பழங்குடி இருளர் மக்களுக்கு நிரந்தரமாக இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.