ADDED : நவ 15, 2024 11:16 PM

அ நிறம் | அளவு
பாகூர்: பாகூர் தொகுதியில் குப்பைகளை அகற்றாத, பாகூர் கொம்யூன் பஞ்சாயத்தை கண்டித்து, இண்டியா கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாகூர் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் குப்பைகளை சரிவர அப்புறப்படுத்தப்படாமல் இருந்து வருகிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது.
குப்பைகளை அகற்றாத பாகூர் கொம்யூன் பஞ்சாயத்தை கண்டித்து, இண்டியா கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தி.மு.க., தொகுதி செயலாளர் அரிக்கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில விவசாய அணி அமைப்பாளர் தவமுருகன், காங்., பிரமுகர் கோபு உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தி.மு.க., தொகுதி அவைத்தலைவர் மூர்த்தி நன்றி கூறினார்.
