/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அ.தி.மு.க., அன்பழகன் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்
/
அ.தி.மு.க., அன்பழகன் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்
அ.தி.மு.க., அன்பழகன் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்
அ.தி.மு.க., அன்பழகன் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 04, 2024 03:19 AM

புதுச்சேரி: அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., விடம் அநாகரிகமாக நடந்து கொண்டஅ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
உப்பளம் தொகுதியில் பாதாள சாக்கடை பள்ளத்தில், ஒரு சிறுவன்எதிர்பாராதவிதமாக தவறி விழுந்த போது அவனது தாய் காப்பாற்றினார். இந்த விவகாரத்தில்அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகனுக்கும், அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., விற்கும்இடையேவாக்குவாதம் எழுந்தது. இது குறித்துசபாநாயகர் செல்வத்திடம் அக்கட்சியினர் மனு அளித்தனர்.
இது குறித்துஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்தில், சம்பத் எம்.எல்.ஏ., புகார் அளித்தார்.போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை னக்கூறி, உப்பளம் தொகுதி தி.மு.க., செயலாளர் சக்திவேல் தலைமையில், ஒதியஞ்சாலை போலீஸ் நிலையம் எதிரில், அக்கட்சியினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி, பேச்சு வார்த்தை நடத்தினார்.அரசியல் நாகரிகம் இல்லாமல், ஒரு எம்.எல்.ஏ.,வை மரியாதை இல்லாமல் பேசி, தள்ளி விடுவது, அவர் காதில் உரக்க கத்துவது போன்ற உடல் மொழியை வெளிப்படுத்திய அன்பழகன் மீது வழக்குப் பதிய வேண்டும் என்று தெரிவித்தனர்.
அவர்இந்த சம்பவம் தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் பேசி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், தலைமை செயற்குழு உறுப்பினர் மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் தங்கவேல், அமுதா குமார், வக்கீல் அணி அமைப்பாளர் பரிமளம், மகளிர் அணி அமைப்பாளர் காயத்ரி, மாணவர் அணி அமைப்பாளர் மணிமாறன், தொண்டர் அணி சந்தோஷ், மாணவர் அணி அமுதன், தொகுதி செயலாளர் கலியமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.