/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
/
வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 09, 2025 08:47 AM

புதுச்சேரி : இன்று நடக்கும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, வருமான வரித்துறை ஊழியர்கள்நேற்று உணவு இடைவேளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் இன்று நடக்கிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வட்டத்தின் கீழ் செயல்படும் வருமான வரித்துறை ஊழியர்கள் சம்மேளனம் புதுச்சேரி கிளை முழுமையாக பங்கேற்கிறது.
அதனை உறுதி செய்யும் வகையில், புதுச்சேரி கிளை ஊழியர்கள் நேற்று உணவு இடைவேளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வருமானவரி அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு புதுச்சேரி கிளை தலைவர் அரவிந்தநாதன் தலைமை தாங்கினார்.கிளை செயலாளர் தயாநிதி முன்னிலை வகித்தார். வருமானவரி அதிகாரிகளின் பொதுச்செயலாளர் கண்ணன், புதுச்சேரி கிளை அதிகாரிகளின் செயலாளர் செங்குட்டுவன், மண்டல செயலாளர் கோவிந்தன் ஆகியோர் வேலை நிறுத்தம் குறித்து விளக்கினர்.
ஆர்ப்பாட்டத்தில், 8வது ஊதியக் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும். 18 மாதங்களுக்கு முடக்கப்பட்ட நிலுவை டி.ஏ.,- வை உடனடியாக வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.