
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : கட்டுமான பொருட்கள் விலையேற்றத்தை கண்டித்து அகில இந்திய கட்டுநர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கட்டுமான பொருட்களான ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் விலை கடந்த சில மாதங்களில் 60 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனை கண்டித்து அகில இந்திய கட்டுநர் சங்கம் தமிழ்நாடு புதுச்சேரி அந்தமான் நிக்கோபார் வழிகாட்டுதல்படி, மாநிலம் தழுவிய அடையாள வேலை நிறுத்த போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் அறிவித்தது.
அதன்படி, சுதேசி மில் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், பில்டர்ஸ் அசோசியேஷன் புதுச்சேரி மையம், ஒப்பந்தாரர்கள் நலச்சங்கம், பில்டர்ஸ் சொசைட்டி டெவெலப்மென்ட் சங்கம், நேதாஜி ஒப்பந்ததாரர்கள் சங்கம், சிவில் இன்ஜினியர் சங்கங்கள் பங்கேற்றது.
ஆர்ப்பாட்டத்தில், கட்டுமான பொருட்களின் விலையை குறைக்க வலிறுயுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

