/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு
/
அரசு பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு
ADDED : ஆக 20, 2025 07:25 AM

புதுச்சேரி : மேட்டுப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், டெங்கு எதிர்ப்பு மாதத்தை முன்னிட்டு திலாசுப்பேட்டை அரசு ஆண்கள் நடுநிலைப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தலைமை ஆசிரியர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். மருத்துவ அதிகாரி தமிழரசி டெங்கு நோய் தடுப்பு முறைகள் மற்றும் சிகிச்சை முறை குறித்து பேசினார். சுகாதார ஆய்வாளர் முனுசாமி கொசு வளர்ச்சியை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கையை விளக்கினார்.
தொடர்ந்து, டெங்கு விழிப்புணர்வு ஊர்வலத்தை மருத்துவ அதிகாரி தமிழரசி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மாணவர்கள், ஆசிரியர்கள், ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் முக்கிய வீதிகள் வழியாக சென்று பொதுமக்களுக்கு டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர்.
ஏற்பாடுகளை சுகாதார உதவி ஆய்வாளர்கள் கோபி, நிஷா, முரளி, ஜெயஸ்ரீ மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.