UPDATED : நவ 27, 2026 08:14 PM
ADDED : நவ 27, 2026 08:14 PM

அ நிறம் | அளவு
அரியாங்குப்பம்: அபிேஷகப்பாக்கம் சேத்திலால் அரசு உயர்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தலைமை ஆசிரியர் பழனிசாமி தலைமை தாங்கினார். ஆசிரியர் கலைவாணி வரவேற்றார். அபிேஷகப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து டாக்டர் மற்றும் செவிலியர்கள் மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள், டெங்கு பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
