ADDED : மே 24, 2025 03:19 AM

புதுச்சேரி: சுகாதாரத்துறை சார்பில் இரு சக்கர வாகனத்தில், டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர்.
புதுச்சேரி சுகாதாரத்துறை மற்றும் குடும்பநலத்துறை கீழ் இயங்கும் தேசிய கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய் திட்டம் மூலம், பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். மே 16ம் தேதி தேசிய டெங்கு தினத்தையொட்டி, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தாண்டு, கருத்து கண்டுபிடித்தல், சுத்தம் செய்தல், மூடி வைத்தல் என்ற கருத்தை முன்நிறுத்தி, நேற்று கடற்கரை சாலையில், இரு சக்கர வாகனத்தில், டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர்.
ஊர்வலத்தை சுகாதாரத்துறை இயக்குநர் ரவிச்சந்திரன் துவக்கி வைத்தார். வெளி இடங்களில் தண்ணீர் தேங்காமல் இருப்பது, தேவையற்ற பொருட்களை வைக்க கூடாது. குப்பைகள் வெளியிடங்களில் வீசக்கூடாது உள்ளிட்டவை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சுகாதார ஊழியர்கள், ஆய்வாளர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் உட்பட ஆஷா பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
ஊர்வலம் கடற்கரை காந்தி சிலையில் இருந்து புறப்பட்டு, சுகாதாரத்துறை அலுவலகம் வழியாக சென்று மீண்டும் காந்தி சிலையில் முடிவுற்றது.