தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/டெங்கு தடுப்பு ஆலோசனை கூட்டம்

டெங்கு தடுப்பு ஆலோசனை கூட்டம்

டெங்கு தடுப்பு ஆலோசனை கூட்டம்


UPDATED : நவ 27, 2026 08:14 PM

ADDED : நவ 27, 2026 08:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 27, 2026 08:14 PM ADDED : நவ 27, 2026 08:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: லாஸ்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், டெங்கு தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக, விரைவு நடவடிக்கை குழுவின் ஆலோசனை கூட்டம் நடந்தது.

மருத்துவ அலுவலர் பத்மினி தலைமை தாங்கினார். டாக்டர் வினோத், சுகாதார ஆய்வாளர் லில்லி புஷ்பராணி, சுகாதார மேற்பார்வையாளர் ராதா முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், உதவி சுகாதார ஆய்வாளர்கள் பன்னீர்செல்வம், கார்த்திகேயன், மீனாட்சி, ஜெகநாதன், சானிட்டரி இன்ஸ்பெக்டர்கள் இளங்கோவன், ஆரோக்கியம், மேஸ்திரி, உழவர்கரை நகராட்சி பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், ஆஷா பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது. வீடு வீடாக சென்று கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்துவது. காய்ச்சல் உள்ளவர்களை உடனடியாக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து வந்து பரிசோதனை செய்யவும், டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அந்தந்த வீட்டு உரிமையாளர்களை கொண்டு அழிக்கவும், கொசு மருந்து தெளிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us