/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பல் மருத்துவ முகாம் நாளை நடக்கிறது
/
பல் மருத்துவ முகாம் நாளை நடக்கிறது
ADDED : ஏப் 19, 2025 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி:
பாண்டிச்சேரி மூத்த குடிமக்கள் நலவாழ்வு சங்கம் சார்பில், நாளை 20ம் தேதி, பல் மருத்துவ முகாம் நடக்கிறது.
பாண்டிச்சேரி மூத்த குடிமக்கள் நலவாழ்வு சங்கம், மகாத்மாகாந்தி அரசு பல் மருத்துவமனை இணைந்து, சாரதாம்பாள் நகர் செயின்ட் பேட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், நாளை 20ம் தேதி, காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை பல் மருத்துவ முகாம் நடக்கிறது.
புதுச்சேரி மூத்த குடிமக்கள் கலந்து கொண்டு, பல் தொடர்பான மருத்துவ சிகிச்சை பெறலாம். முகாமிற்கு வரும் மூத்த குடிமக்கள் சங்க உறுப்பினர் அடையாள அட்டையுடன் வரவேண்டும் என, சங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.