
பாகூர்: மணப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளியில், பல் மருத்துவ முகாம் நடந்தது.
பிள்ளையார்குப்பம் இந்திராகாந்தி பல் மருத்துவ கல்லுாரிசார்பில் நடைபெற்ற முகாமில், பள்ளி தலைமை ஆசிரியர் அரிவரதன் தலைமை தாங்கினார்.
பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சகுந்தலா, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் சுப்ரமணியன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் முருகையன் முன்னிலை வகித்தனர்.
இந்திரா காந்தி பல் மருத்துவ கல்லுாரி மருத்துவ அதிகாரி பிரியதர்ஷினி, ஒருங்கிணைப்பாளர் அமரவேல் ஆகியோர் தலைமையில் 25க்கும் மேற்பட்டோர் கொண்ட மருத்துவ குழுவினர் பங்கேற்று, மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், பொதுமக்களுக்கு பல் மருத்துவ பரிசோதனைகள் செய்து, சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை வழங்கினர்.
ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர்கள் விவேகானந்தன், கலைச்செல்வி, சுமதிகேசவன், ஏகதேவி, மஞ்சு, மதிவதனி, பானுப்பிரியா, இந்திரா, பிருந்தா மற்றும் பள்ளி ஊழியர்கள் செய்திருந்தனர்.

