/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல் சிகிச்சை பிரிவு துவக்கம்
/
ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல் சிகிச்சை பிரிவு துவக்கம்
ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல் சிகிச்சை பிரிவு துவக்கம்
ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல் சிகிச்சை பிரிவு துவக்கம்
ADDED : ஆக 30, 2025 07:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: மேட்டுப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், கோரிமேடு, மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவ நிறுவனம் சார்பில், சிறப்பு பல் சிகிச்சை பிரிவு துவக்க விழா நேற்று நடந்தது.
விழாவிற்கு, பல் மருத்துவ நிறுவன தலைவரும், முதல்வருமான ரங்கசாமி தலைமை தாங்கி, சிறப்பு பல் சிகிச்சை பிரிவை மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.
இதில், அரசு கொறடா ஆறுமுகம், ரமேஷ் எம்.எல்.ஏ., சுகாதார செயலர் ஜெயந்தகுமார் ரே, சுகாதாரத்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை மகாத்மா காந்தி பல் மருத்துவ நிறுவனத்தின் முதல்வர் கென்னடி பாபு மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.