தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/துறை–தன்னாட்சி ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை, போனஸ் அறிவிப்பு

துறை–தன்னாட்சி ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை, போனஸ் அறிவிப்பு

துறை–தன்னாட்சி ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை, போனஸ் அறிவிப்பு


UPDATED : நவ 04, 2026 12:12 PM

ADDED : நவ 04, 2026 12:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2026 12:12 PM ADDED : நவ 04, 2026 12:07 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி அரசு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளின் ஊழியர்களுக்கு 2025-–26ம் ஆண்டிற்கான ஊக்கத்தொகையுடன் கூடிய போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்குவது குறித்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக புதுச்சேரி அரசுத்துறையின் நிதித்துறை இயக்குநர் சிவக்குமார் பிறப்பித்துள்ள உத்தரவில், அரசுக்கு கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள், கழகங்கள் மற்றும் கம்பெனி சட்டம் அல்லது கூட்டுறவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட அனைத்து சொசைட்டிகளும் இந்த போனஸை வழங்கலாம்.

எனினும், கடந்த 2024-–25ம் ஆண்டு வழங்கப்பட்ட தொகையை விடக் கூடுதலாகக் கொடுக்கக் கூடாது என்றும், நிறுவனங்கள் தங்களது சொந்த நிதியைக் கொண்டே தகுதியான அதிகாரியின் ஒப்புதலுடன் இந்த முடிவை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், போனஸ் தொகையை வழங்குவதற்காக யூனியன் பிரதேசத்தின் பட்ஜெட்டில் மானிய உதவியாக கூடுதல் நிதி எதுவும் ஒதுக்கப்படவோ அல்லது வழங்கப்படவோ மாட்டாது என்று நிதித்துறை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. புதுச்சேரி, காரைக்கால், மாகே மற்றும் ஏனாம் பகுதிகளில் உள்ள அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளின் நிர்வாக இயக்குநர்கள் மற்றும் தலைவர்களுக்கு இந்த உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us