/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிரதமர் அலுவலக துணை செயலாளர் ஆரோவில்லில் ஆய்வு
/
பிரதமர் அலுவலக துணை செயலாளர் ஆரோவில்லில் ஆய்வு
ADDED : ஜூலை 11, 2025 05:34 AM

வானுார்:பிரதமர் அலுவலகத்தின் துணை செயலாளர் சந்திரமோகன் தாக்கூர், ஆரோவிலில் கல்வி சார்ந்த ஆய்வு பயணம் மேற்கொண்டார்.
மாற்றுக் கல்வி முறைகள், சமூக பங்கேற்பு மற்றும் நிலையான வளர்ச்சிக்கான ஆரோவில்லின் முயற்சிகளை நேரடியாக அறிந்து கொள்வதே இந்த பயணத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது. மேலும், அவர் பிரதமர் அலுவலகத்தின் கீழ் செயல்படும் ஆறு பிஎம்ஸ்ரீ” பள்ளிகளையும் பார்வையிட்டார்.
ஆரோவில் செயற்குழு உறுப்பினர் அருணிடம், ஆரோவில் கல்வி நோக்கம், நிர்வாக அமைப்பு, கற்றல் சூழல் குறித்து தெரிவித்தார்.
இந்தப் பயணத்தின் போது, ஆரோவில் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் பல்வேறு பிரிவுகள் மற்றும் கற்றல் மையங்கள், அனுபவக்கல்வி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, ஆராய்ச்சி மற்றும் கிராமியத் தொடர்புகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
முக்கியமாக, ஆரோவில் அறக்கட்டளையின் செயல்பாடுகள் மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிலையில், சென்னை ஐ.ஐ.டி., உடன் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் கல்வி, கிராம மேம்பாடு மற்றும் நிலையான தொழில்நுட்பங்களில் ஆய்வு மற்றும் வளர்ச்சி தொடர்பான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டது.